அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் இன்னயாவினும் புண்ணியங்கோடி ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல் – பாரதி-

Monday, 25 April 2011

எனக்கு(ப்) பிடிக்கும்!

கடல் பிடிக்கும்
துள்ளி விளையாடும்
அலைகள் பிடிக்கும்
 பூக்கள் பிடிக்கும்
பூக்களில் இருந்து வரும்
வாசனை பிடிக்கும்

தென்றல் பிடிக்கும்
தென்றலுக்குத் தலையாட்டும்
இளம் நாற்றுக்கள் பிடிக்கும்


பால் பிடிக்கும்
பால் சுமந்து வரும்
பசுக்கள் பிடிக்கும்
துள்ளியோடும் கன்றுகள் பிடிக்கும்
துணையோடு கொஞ்சும்
கிளிகள் பிடிக்கும்
கிளிப் பேச்சுப் பிடிக்கும்

கனிகள் பிடிக்கும்
கனிவாய் பேசும்
கன்னியர் பிடிக்கும்
காமமில்லாத நண்பிகள்
பிடிக்கும்

காவியம் பிடிக்கும்
கவிதை பிடிக்கும் -என்
கவிதை நீ வாசிக்க(ப்) பிடிக்கும்

முதுமையான பின்னும்
காதல் பிடிக்கும்-என்னை
காதலிப்பதாய் சொன்ன
காதலியையும் பிடிக்கும்


அன்னை திரெசா போல்
அம்மாக்கள் பிடிக்கும்
அள்ளி கொடுக்கின்ற –என்
வலக் கரம் பிடிக்கும்
கட்டி அணைக்கும்
மழைலை பிடிக்கும்
கை தூக்கி விடும்
இளமை பிடிக்கும் -கை
எடுத்துக் கும்பிடும்
முதுமை பிடிக்கும்!

வஞ்சகமில்லா
நட்பு பிடிக்கும்
வாடி இருந்தாலும்
அழகாய் இருக்கிற –என்
மனைவியின் முகம்
பிடிக்கும்

வானொலி பிடிக்கும்
இன்பத்தமிழ்
இன்னும் பிடிக்கும்;
மரம் நடப் பிடிக்கும்
மரங்களோடு பேசப் பிடிக்கும்
மனிதரைப் பிடிக்கும் -நல்ல
மனிதராய் நடக்கப் பிடிக்கும்!!

4 comments:

நண்பன் said...

வலை எழுத வந்திருக்கும் உங்களை, வருக வருக என்று வரவேற்கிறேன்.

ஆவூரான் said...

@நண்பன்

நன்றிகள் நண்பரே

ஆவூரான் said...

@Mahan.Thamesh

நன்றி நண்பரே

நிரூபன் said...

முதற் கவிதையே தாய் மண்ணை விட்டுத் தூர தேசத்தில் வாழ்ந்தாலும், இன்றும் வேரோடும், வேரடி மண்ணோடும் நினைவுகள் கலந்திருப்பதை அழகாகச் சொல்லுகிறது சகோ.
வாழ்த்துக்களும், வரவேற்புக்களும்!

Post a Comment