வேந்தன் கடலுள்ள திசையை பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் பல தடவைகள் சாப்பிடாமல் இருப்பதும் கண்ணீhத்துளிகள் அவன் கன்னத்தை நனைத்திருப்பதைப் பார்த்த அவனோடு வந்திருந்த மூர்த்தி எழுந்து வந்து அவனின் தோளைத் தொட்டதும்
இறந்தது குமார் இல்லை வேந்தன் அவனுடைய பெயர் என்று கொடுத்து விட்டேன்.
அதோடு எனது பெயர் குமார் என்று தான் கொடுத்திருக்கின்றேன்.
என்ன சொல்லுகிறாய் ….ஏன் இப்படிச் சொன்னீ…
முள்ளிவாய்க்காலில் தானே அண்ணன் என் பரம்பரையே அழிந்து போச்சு.வசந்தகுமார் போட்ட சோற்றினையும் ஆறுதலிலும் மட்டுமில்லை தான் போய் நல்லா வாழப்போகின்ற இடத்தக்கு நீயும் வா என்று என்னையும் அவனுடைய பணத்தில் கூட்டிக்கொண்டுதானே வந்தவன்.
அதுக்காக அவன்ர பெயரைக் கொடுத்து நீ என்ன செய்யப் போகின்றாய்….

