அம்பித் தாத்தா
எழுதித் தந்த பாட்டு
தமிழ் பாட்டு

அமுது போல இனிக்கு தடி-நீ
பாடப் பாடக் கேட்டு (அம்பி தாத்தா)

மழை பொழியும்
அழகை பாடுவார்
மண் மகிழ்ந்து விடும்
முளையை பாடுவார் (அம்பித் தாத்தா)

பால் கொடுக்கும்
பசுவை பாடுவார்-வானில்
பால் ஓளியை தரும்
நிலவைப் பாடுவார் (அம்பித் தாத்தா)

தமிழ் செழிக்கும்
உலகைப் பாடுவார்
தமிழ் வாழத் தான்-பாடுபடும்
வலியைப் பாடுவார் (அம்பித் தாத்தா)


கவிஞர் ஆவூரான்.