அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் இன்னயாவினும் புண்ணியங்கோடி ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல் – பாரதி-

Monday, 25 April 2011

அமுது தமிழ்- சிறுவர் பாடல்

அமுது தமிழை அள்ளி- நாங்கள்
பருகப் போகிறோம்
ஆசைத் தமிழில் பாட்டுப் பாடி
அசத்தப் போகிறோம்

முத்தமிழில் உள்ள சுவைகள்- எல்லாம்
முகரப் போகிறோம்
முடிந்த வரைக்கும் அனைவருக்கும்
கூறப் போகிறோம்!


பத்துப் பாட்டு எட்டுத் தொகையும்
கற்கப் போகிறோம்
கங்காரு நாட்டிலேயும்
கன்னித் தமிழை வளர்க்கப் போகிறோம்!

இன்பத் தமிழை(த்) துணைக்கு நாங்கள்
எழுதிக் கேட்கிறோம்
இசையை(க்) கூட்டிக் காற்றில் மிதக்க
இணைந்து படிக்கிறோம்...!

2 comments:

நிரூபன் said...

சந்த கவியாய், தாள நயத்தோடு மழலைகளுக்கேற்ற ஒரு பாடல் எழுதியுள்ளீர்கள். புலம் பெயர்ந்தும், தமிழ் மீது தங்களைப் போன்றவர்கள் தீராத காதலுடன் உள்ளது, மிகிழ்ச்சியாக இருக்கிறது சகோ.

ஆவூரான் said...

@நிரூபன்உங்களைப் போன்ரோர் தரும் ஆதரவு தான் என்னை எழுதத் துண்டியது எனது ஆக்கங்களை தொடர்ந்து படித்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி.

Post a Comment