அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் இன்னயாவினும் புண்ணியங்கோடி ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல் – பாரதி-

Friday, 29 April 2011

கைமாறு



வேந்தன் கடலுள்ள திசையை பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் பல தடவைகள் சாப்பிடாமல் இருப்பதும் கண்ணீhத்துளிகள் அவன் கன்னத்தை நனைத்திருப்பதைப் பார்த்த அவனோடு வந்திருந்த மூர்த்தி எழுந்து வந்து அவனின் தோளைத் தொட்டதும் 

இறந்தது குமார் இல்லை வேந்தன் அவனுடைய பெயர் என்று கொடுத்து விட்டேன்.
அதோடு எனது பெயர் குமார் என்று தான் கொடுத்திருக்கின்றேன்.

என்ன சொல்லுகிறாய் ….ஏன் இப்படிச் சொன்னீ… 
முள்ளிவாய்க்காலில் தானே அண்ணன் என் பரம்பரையே அழிந்து போச்சு.வசந்தகுமார் போட்ட சோற்றினையும் ஆறுதலிலும் மட்டுமில்லை தான் போய் நல்லா வாழப்போகின்ற இடத்தக்கு நீயும் வா என்று  என்னையும் அவனுடைய பணத்தில் கூட்டிக்கொண்டுதானே வந்தவன். 

அதுக்காக அவன்ர பெயரைக் கொடுத்து நீ என்ன செய்யப் போகின்றாய்…. 


அவுஸ்ரேலியா நோக்கி வந்த படகில் 46 பேரும் கப்பலுடன் தாண்டுபோகக் கூடாது என்று எம்மைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற பேரவாவில் தானே தன் உயிரையும் துச்சமாக மதித்து அந்தக் கடலில் இறங்கி மற்ற நாலுபேரோடும் நீந்தினவன். 


சரி வேந்தன் பெயரை மாத்தி என்ன செய்யப் போகின்றாய்.

அவனை நம்பி அவனுக்கென்றொரு குடும்பம் இருக்கு அவனின் தாய் சகோதரங்கள் இருக்கு அவன் இப்படி கடலுக்கு இரையாகிப் போனான் என்று அறிந்தால் அதுகள் உயிரை விட்டிடுங்கள் அதனால தான் …


மூர்த்தி அண்ணன் தயவு செய்து உங்களுக்குத் தெரிந்த இந்த உண்மையை யாருக்கும் சொல்லாதேங்கோ.குமாரின் குடும்பத்துக்கும் என்னை வாழவைத்த குமாருக்கும் நான் செய்யப்போகும் கைமாறு இது…

மூர்த்தியின் கையை பிடித்துக் கொண்டு குமாராக மாறிய வேந்தன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட மூர்த்தி அப்படியே மௌனத்தில் உறைந்து போனான்.

0 comments:

Post a Comment