ஒரு நாட்டில் ஒரு மொழிதான் இருக்க வேண்டும் என்றும் ஒரு மதம் தான் இருக்க வேண்டும் என்றும் வரிந்து கட்டிக் கொண்டு ஆட்ச்சிப் பீடத்தில் எத்தனையோ அரச சுகபோகிகள் ஆண்டு கொண்டிருக்கின்ற இந்த 21ஆம் நூற்றாண்டிலும்
இந்த பென்னாம் பெரிய தீவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் மொழியையும் கலை கலச்சாரத்தையும் பாதுகாக்கவும் பண்பட்டு வாழ்வும் நெடு ரீதியான சட்ட ஒழுங்காற்று அதிகாரத்தைப்பேணி வரும் நாடு என்றால் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த சொர்க்க பூமியான அவுஸ்ரேலியாவில்
வந்தேறு குடிகளான நாம் எமது மொழியையும் எமது மதம் சார்ந்த கலை கலாசாரப்பண்பாட்டு விழுமியங்களையும் நாம் கட்டிக்கொண்டு போகும் இடமெல்லாம் வளர்க்கக்கூடிய இனம் என்ற காரண்த்தால் மொழியால் அடையாளக்ப்படுத்தி இங்கு வாழ்கின்றோம்.
தமிழ் மொழியின் அடையாளத்தை பாதுகாக்க தமிழ் மொழியின் தொன்மையையும் இலக்கண் இலக்கிய மரபுகளையும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகம் காவித்திரிவதை நாம் இங்கு காண்கின்றோம்.ஆனால் இந்தப் பதனிடல் அல்லது செம்மைப்படுத்தல் எதுவரையும் என்ற கேள்விக்குறி தூரத்தே தெரிவதை யாரலும் மறுக்க முடியாது. இந்தக் கேள்வியின் மையக் கருத்தைக் கொண்டே இந்த பத்தி எழுத்து உலாவருகிறது.
கடந்த வருடம் வீ.சீ.ஈ பரீட்சையில் தேர்வு எழுதிய மாண்வர்கள் சிலருடன் ஈழமுரசுப் பத்திரிகைக்காக உரையாடியவன் என்ற முறையில் ஒரு ஆழமான நெருடல் என்னை வருடிக்கொண்டிருப்பதாலும்
மெல்பேணில் தமிழை வளர்ப்பதில் பாரதிப்பள்ளியும் ஈழத்தமிழ் சங்கப் பாடசாலைகழும் மிகவும் முனைப்புடன் பங்காற்றி வருவதை நாம் பார்க்கின்றோம். பாரதிப்பள்ளியினுடைய நிர்வாகிகளும் ஈழத்த்மிழ்ச்சங்க நிர்வாகிகளும் ஒரு கோட்டுக்குள் இருக்கிறார்களா என்பது எனக்கு தெரியாது. ஆனால் தமிழ் கல்வி கற்பிக்க வேண்டும் என்று விரும்பும் இளைய தலைமுறைப் பெற்றோர்களையும் கற்க வரும் சிறார்களையும் பாரதிப்பள்ளியில் காணக்கூடியதாக இருக்கின்றது.
கற்கை நெறியின் இறுதி நிலை தான் வீ. சி.ஈ தேர்வு கடந்த ஆண்டு ஆகக் குறைந்தது 14 மாண்வர்கள் தான் மெல்பேணில் தேற்றி இருக்கிறார்கள்.
இருந்த போதிலும் மாணவன் திவாகர் அவர்கள் தனது உரையில் சொன்னது போல் தேர்வை மையமாகக் கொண்டு தமிழ் கற்க வரும் மாணவர்களின் தொகை குறைவாகஇருப்பதைக் காணமுடிகிறது.என்ற கூற்றுப் பொருத்தமாக இருப்பதைக் காணமுடிகிறது.
இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதைப் பாரதிப் பள்ளியின் நிர்வாகக் குளுவினரும் இணைந்து ஒரு எதிகால்க் கண்ணோட்டத்துடன் அணுகுவார்களேயானால் தமிழுக்கு கல்வி கற்க வாரத்தில் ஒரு நாள் போதாமல் இருக்கலாம். அல்லது முழுநேரப் பாடசலையாக இயங்கலாம் என்பதும் அந்த மாணவர்களின் ஏக்கம் தான். அவர்களும் தங்களின் பங்களிப்புக்களை செய்யவும் முன்வரலாம்.
இதனோடு சேர்த்து அரச அங்கீகரமாக இருக்கும் செம்மொழியான தமிழை வீட்டில் பேசும் மொழி தமிழ் தான் என்றும் அதை அலுவலகச் சட்டங்ளில் அறிவுப்புக்கள்செய்யவும் நாம் முதலில் ஆவனை செய்வோம். தமிழ் என்று சொல்ல உமிழ்கின்ற வாய் நீரும் இனிக்கின்றதே. ‘ ஏன்...... இனிய மொழி தமிழ் என்பதால் தான்’.
6 comments:
அவுஸ்ரேலியா பல்லினக்கலாச்சாரத்தைக் கொண்ட நாடு. இங்கு வாழும் மக்கள் அறுபத்திமூன்று நாடுகளை சேர்ந்தவர்கள் என்று அண்ணளவான கணிப்பீடொன்று சில மாதங்ளுக்கு முன்பு வெளியாகி இருந்தது.//
யம்மாடி, எப்பூடித் தான் ஒற்றுமையாக இருக்கிறார்களோ?
நம்ம நாட்டில் வாழும் மூவின மக்களுக்குள் மட்டும் பல வேற்றுமைகள்;-))
சகோ, தமிழிஷ், தமிழ் மணத்தில் இணைக்கவில்லையா?
ஒரு நாட்டில் ஒரு மொழிதான் இருக்க வேண்டும் என்றும் ஒரு மதம் தான் இருக்க வேண்டும் என்றும் வரிந்து கட்டிக் கொண்டு ஆட்ச்சிப் பீடத்தில் எத்தனையோ அரச சுகபோகிகள் ஆண்டு கொண்டிருக்கின்ற இந்த 21ஆம் நூற்றாண்டிலும்//
இது...எவருக்கோ சாட்டையால் அடிப்பது போன்று உள்ளதே;-))
அஃதே...அஃதே....
தமிழ் மீதான இளைய தலை முறையினரின் ஆர்வமும், புலம் பெயர் நாட்டிலும் அரச அங்கீகாரத்துடன் எங்கள் தமிழ் இருப்பதாக உங்கள் பதிவினூடாக அறிகையில் காதில் தேன் வந்து பாய்கிறது சகோ.
தமிழிஸ், தமிழ் 10 இல் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் தானே சகோ.
@நிரூபன்அவுஸ்ரேலியா பல்லினக்கலாச்சாரத்தைக் கொண்ட நாடு. இங்கு வாழும் மக்கள் அறுபத்திமூன்று நாடுகளை சேர்ந்தவர்கள் என்று அண்ணளவான கணிப்பீடொன்று சில மாதங்ளுக்கு முன்பு வெளியாகி இருந்தது.//
யம்மாடி, எப்பூடித் தான் ஒற்றுமையாக இருக்கிறார்களோ?
நம்ம நாட்டில் வாழும் மூவின மக்களுக்குள் மட்டும் பல வேற்றுமைகள்;-))//
உங்கள் கருத்துக்கு நன்றி
Post a Comment