தூழியில் ஆடும் வேளையிலே-அன்னை
தூங்க வைப்பாள் அவள் பாட்டினிலே
ஆழியில் எடுத்த முத்தாய்-என்னை
அள்ளி அணைப்பாள் தோழினிலே (தூழியில்)
வைரத்தை முத்தை ஒப்பிடுவாள்
வாழ்வுக்கு நல்லதை செப்பிடுவாள்
கல்வி செல்வத்தை தேடிடவே
கண்ணுறங்காமலே காத்திடுவாள் (தூழியில்)
நிலவினை காட்டி சோறினை ஊட்டி
நிலத்தினில் விரலால் அ” னாவை தீட்டி
அழகழகாய் ஆடைகள் சூட்டி
ஆபரணம் எல்லாம் உடலினில் மாட்டி (தூழியில்)
அன்னைக்கு ஈடாய் யாருமில்லை
அவளைக் கும்பிட இங்கு கோயிலில்லை
ஆராரோ தேவாரம் பாடிடுவோம் – அந்த
தெய்வத்தை இந் நாளில் போற்றிடுவோம். (தூழியில்)
அன்னையர் தினத்துக்காக........
அன்னையர் தினத்துக்காக........
0 comments:
Post a Comment